பக்கம்:இலட்சிய பூமி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194


திர சபை'யின் பிரத்தியேகமான அறையொன்றில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வரிசைக்கிரமமாக நிற்கிருர்கள்; ஒவ்வொரு தம்பதிக்கும் அளிக்கப்பட்ட நேரம் இருபது நிமிஷங்கள்! ஒரு ஜதை ஒரு சில நிமிஷங்கள் காலதாமதம் செய்து வெளியே வந்தால், அவர்கள் அடுத்தபடி காத்திருப்பவர்களிடம், பொது மக்களின் செளகரியங்களைப்பற்றி யோசிக்காம லும், சுயநலத்தோடும் இருந்துவிட்டதற்காக, மன் னிப்புக் கோரவேண்டும்!....அட கடவுளே,!....குறிப் பிட்ட நேரத்திற்குள்-இருபது நிமிஷத்தில்சம்போகம் நடத்துவதைக் காட்டிலும் செத்து விடுவேன் நான்!” "நகரத்தில் எவ்வாறு அவர்கள் இதையெல்லாம் ஒழுங்குடன் அமைக்கப் போகிருர்களோ, தெரிய வில்லை. எது எப்படி ஆனலும் சரி; நாம் இதை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிடுவோம்.” மறுநாளையத் திட்டங்களைப் பற்றி அவளிடம் சொல்லத் தொடங்கினன் ஃபான். "டெங்பிங்கைப் பற்றித்தான் நான் பயப்படு கிறேன். அவன் வெளியில் வந்தால், அவனுடன் சற்று விளையாடலாம்; ஆனால், நாளே இரவு நாம் பயணப்படும் திட்டத்தில் எதுவுமே குறுக்கிடக் கூடாது. சந்தேகங்கள் எதையும் கிளப்பாதே, , «55}T” 6ì) அட்டவணைக்கு ஏற்ப நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஒட்டித்தான் நமது திட்டங்கள் அமைகின்றன. தேவைப்பட்டால், நான் அவனைக் கொல்லவும் செய்வேன். அசாயைப் பற்றித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/194&oldid=1274928" இலிருந்து மீள்விக்கப்பட்டது