உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196


அன்பை அவன் என்றுமே பெற்றது கிடையாது. என்னை அவன் நம்புவதற்கு வெகு காலம் பிடித்தது. அதன் பிறகு நான் அவனுடைய அன்னையாகவே ஆனேன். உங்களுக்குத் தெரியாது....அந்தப் பையன் நான் இல்லாவிடில் சதா அழுது தீர்ப்பான். அவன் என் மார்பில் அணைந்து கதறி அழுதுவிட்டான். உங்களுடன் நானும் வரவேண்டுமென்று நீங்கள் நேற்று என்னிடம் சொன்னபோது, எடுத்த எடுப்பில் அவனைக் குறித்துத்தான் நான் யோசித்தேன். போகும் வழியில் அவன் நமக்குப் பெரிதும் உபயோக மாக இருப்பான் என்றே நான் கருதுகிறேன்." "ஓஹோ கோழிக் குஞ்சுகளைத் திருடுவதற்கு உபயோகமாக இருப்பான் என்று நீ நினைக்கிருயோ?” என்று சிரித்தான் ஃபான். “அவன் ஒரு சிறந்த சாரணகை இருந்தவன். அவனை விடுதலை செய்யும்படி டெங்பிங்கிடம் கேட் டுக்கொள்ளட்டுமா?” “வேண்டாம் டெங்பிங்கின் இ ரு ப் பி ட ம் இப்போது எதுவென்று ஒருவருக்கும் தெரியாது. தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தி லிருந்து நாய்போல ஒட்டம் பிடித்ததை நான் கண்ணுல் பார்த்தேன்” என்று வேண்டா வெறுப் பாகப் பதில் அளித்தான் ஃபான். 'மஞ்சூரியாவுக்கு அனுப்பப்படுவதற்கு முன் பாக நான் என்னுடைய அசாயைப் பார்க்க வேண்டும்.” மஞ்சூரியா என்பது பிரத்தியேகமாக வழங்கப் படும் பொதுச் சொல்லாக ஆகிவிட்டது; அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/196&oldid=1274930" இலிருந்து மீள்விக்கப்பட்டது