உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200


உடனே 'ஹே! ஹே!” என்று அலட்டினுள். அவள் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. வாசற்கதவைப் படபட வென்று தட்டிக் குலுக்கினுள். சதுரத் தலையுடன் இருந்த பாதுகாப்பாளன் ஏறிட்டு நிமிர்ந்தான்; ஒர் இளம் பெண்மணியின் முகத்தைப் பார்த்தான். 'நீ என்ன செய்ய முயன்றுகொண்டிருக்கிருய்? மறுபடியும் சிறையை உடைத்துக்கொண்டு உள்ளே புக எத்தனம் செய்கிருயா?” - "நான் டாங்பூ (உயர் அதிகாரி) விடமிருந்து வரு கிறேன்” என்று தைரியமாகக் கூறினுள் லெய்வா. பாதுகாப்பாளன் அவளை நெருங்கி நடந்தான் அப்பொழுது, மற்ற ஸ்திரீகள் முண்டியடித்துக் கொண்டு நெருங்கினர். தன்னிடமிருந்த சீட்டை லெய்வா காண்பித் தாள். காவலன் அதை உற்றுப் பார்த்தான். 'பெண்கள் தொழில் இராணுவப் பகுதித் தலைவியா நீங்கள்?’ என்று வினவினன். "உங்களுக்கு என்ன வேண்டும்?” 'கைதி ஒருவனைப் பார்க்கவேண்டும்.” 'டாங்பூ (உயர் அதிகாரி) உங்களை அனுப்பி ஞரா?” சற்றுத் தயங்கியவளாக அவள் சொன்னுள்: "நான் என்னுடைய பையன் அசாயை இப்பொழுது பார்க்க விரும்புகிறேன்.” சிறைக்காவலன் சிரித்தான்: 'ஓ....அசாயா?.... ஆமாம்; அவனே நான் அறிவேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/200&oldid=1274934" இலிருந்து மீள்விக்கப்பட்டது