உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 L 'தயவுசெய்து என்னை உள்ளே செல்ல அனுமதி யுங்கள்.” 'நான் வருந்துகிறேன். எனக்குக் கண்டிப்பான உத்தரவுகள் இடப்பட்டிருக்கின்றன.” "அவர்கள் அவனே மஞ்சூரியாவுக்கு அனுப்பப் போகிரு.ர்களா?” “எனக்கு எப்படித் தெரியும்?” இதைக் கூறிவிட்டு காவலன் அவளைத் தாண்டி மேலே நடந்து செல்லலான்ை. பெண்மணிகள் சிலர் லெய்வாவை நினைவுபடுத் திக்கொண்டு அவளுடன் பேச முயன்றனர். ஆனல் அவளால் பேச முடியவில்லை; அவள் நிம்மதியிழந் தாள். கட்சியின் தலைமை அலுவலகமிருக்கும் இடத் தைக் காண அவள் குறுக்கு வழியாக கால்களை எட்டி வைத்து நடந்தாள். செங்கல்லால் ஆன அக்கட்டிடம் இடைவெளி விட்டுப் பிளந்திருந்தது; அதன் பெரும் பகுதி இருண்டு கறுத்திருந்தது; உத்தரங்களும் குறுக்கு விட்டங்களும் விழுந்துவிட்டன. மேல்தளம் அகலப் பிளந்துவிட்டமாதிரி தோன்றியது. அவள் ஓய்வாக நடந்து திரும்பி, மறுபடியும் அவ் விடத்தைச் சுற்றி வந்தாள். அசாயை மீண்டும் பார்க்காமலிருக்க முடியவில்லை. உள்ளே இருண்ட நிலவறையில் என்ன நடந்துகொண்டிருந்ததென் பதை அவளால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. சில பெண்கள் அங்கிருந்து சென்ருர்கள் வேறு சிலர் தங்கியிருந்தார்கள். இருபது நிமிஷம் கழித்து, காவலாளன் பின் தொடர ஓர் அதிகாரி வந்தான். கறுப்பு மீசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/201&oldid=752768" இலிருந்து மீள்விக்கப்பட்டது