உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20? வைத்து இருந்தான்; தோள்களில் அகலமான சிவப்புப் பட்டை இருந்தது; கையில் சிறிய பெட்டி, ஒன்றும் இருந்தது. இத்தருணத்தைத் தவறவிடக்கூடாது என்று லெய்வா முடிவு செய்தாள். அதிகாரி நெருங்கியதும் அவள் முன்வந்து அவனிடம், 'ஹெல்லோ காப்டன் வியாவோ!” என்று சொன்னுள். காப்டன் நின்ருன்; அவளை ஞாபகப்படுத்திக் கொண்டான். "ஓஹோ காம்ரேட் லெய்வா!' அவன் செவியில் ஏதோ சொல்ல அவனை நெருங் கிச் சென்ருள். அவள் சொல்வதைக் கேட்கக் காப்டன் தலையைக் குனிந்தான். - “உள்ளே செல்வதற்கு டெங்பிங்கிடமிருந்து எனக்கு அனுமதிச் சீட்டு இருக்கிறது.” "அப்படியா?” என்று காப்டன் ஆச்சரியத்தில் தன் முகத்தைத் தேய்த்துக்கொண்டான். டெங். பிங்கின் அந்தரங்கக் காதலி லெய்வா என்பது அவனுக்குத் தெரியும்."வேறு ஏதாகிலும் அத்தாட்சி உங்களிடம் இருக்கின்றதா?" என்று கேட்டான். . .. 'நான் சொல்லிக்கொண்டிருக்கிறேனே, இது போதாதா?’ "கமிஷனர் எங்கே?" காப்டன் ஆவல் மிகுந்து கேட்டான். - லெய்வா. இனிமையாகப் புன்முறுவல் செய்த வண்ணம், "எனக்கு அச்சமாக இருக்கிறது; அதை நான் உங்களிடம் சொல்லக்கூடாது” என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/202&oldid=752769" இலிருந்து மீள்விக்கப்பட்டது