உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203


வாசலில் இருந்த காவலாளியிடம் திரும்பி, 'அவளை உள்ளே போக விடு!” என்று காப்டன் உத்திரவு போட்டான். நல்லிரவு சொல்லிவிட்டு அவன் நடந்து சென்ருன். காவலாளி கவனமுடன் நேராக நின்று, லெய்வா கடந்து சென்றபோது அவளுக்கு வணங்கி மரியாதை செய்தான். முன்புறமிருந்த அலுவலகத்தைத் தாண்டி இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டிருந்த-தாழ் வாரத்தின் மங்கலான வெளிச்சத்தில் அவளை அழைத் துச் சென்ருன் காவலன். மனித வேர்வையின் துர் நாற்றம் அவள் நாசியைத் தாக்கியது. கல்லறை களினின்றும் திடீர் திடீரென்று எழும் மனிதரின் மரண ஒலத்தால் கலைக்கப்பட்ட அமைதியினூடே சந்தடியின்றி அந்த இருண்ட சிறைச்சாலையின் அறை களைக் கடந்தபோது, அவளுடைய உடம்பு மயிர்க் கூச்செறிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் வரிசைக்கு எட்டு அல்லது பத்து சிறு அறைகள் இருந்தன. காவலன் சாவியை அழுத்தித் திருப்பி, கதவைத் தள்ளித் திறந்து டார்ச் விளக்கை அடித்து 'அசாய், உன்னை யாரோ பார்க்க வந்திருக்கிருர்கள்” என்ருன். விளக்கொளியில் முகங்கள் விட்டுவிட்டுப் பிரகா சித்தன. சிலர் ஒன்ருக அடைந்து கிடந்தனர்; சிலர் சம்மணமிட்டுக் குந்தியிருந்தனர்; சிலர். தரையில் படுத்துக் கிடந்தனர். யாரும் பதில் சொல்லக் காணுேம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/203&oldid=1274935" இலிருந்து மீள்விக்கப்பட்டது