பக்கம்:இலட்சிய பூமி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204


'ரொம்பவும் வேடிக்கையாக இருக்கிறது.அவன் பெயர் 12-ஆம் அறையில் காணப்படுகிறது. அது தவருக இருக்க வேண்டும்” என்ருன் காவலாளன். உள்ளே பார்ப்பதற்காக காவலாளி திரும்பிய நேரத்தில் லெய்வா இருட்டில் 'அசாய், அசாய்! நீ எங்கு இருக்கிருய்?’ என்று கூவி அழைத்தாள். "இதோ! இங்கே இருக்கிறேன் நான்!...' என்று மூலையிலிருந்து ஒரு குரல் வந்தது. அந்தத்திக்கை நோக்கி ஒளிவிளக்கை அடித் தான் காவலாளி. கதவின் சிறு திரைக்குப் பின்புறமிருந்து ஒரு பையனின் முகம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தைக் கண்டான் அவன். கவனத்தைக் கவர்வதற் காக கதவில் தட்டிச் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த அறைக்கு விரைந்தாள் லெய்வா. கதவு திறக்கப்பட்டதும் வெளியே பாய்ந்த அசாயை தடுத்து நிறுத்தினுன் காவலாளி. "நான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன்! நான் விடுதலை ஆகியிருக்கிறேன்!” என்று தன்னைப் பிடித் துக்கொள்ள முயன்ற காவலாளியிடம் கூச்சலிட் டான் அசாய். - 'அமைதியாக இரு; நான் உன்னைப் பார்க்கவே வந்திருக்கிறேன்" என்ருள் லெய்வா. "என்னைப்பற்றி நீங்கள் டெங்பிங்கிடம் பேச வில்லையா?.என்னைக் கைது. செய்ததன் நோக்கம் என்ன?’ என்று கேட்டான் அசாய். - காவலாளிலெய்வாவை நோக்கி "இதோ பாருங் கள். நான் இப்பொழுது இங்கு பொறுப்பில் இருக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/204&oldid=1274936" இலிருந்து மீள்விக்கப்பட்டது