உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205


றேன். இந்தப் பையனை விடுவிக்கும்படி டெங்பிங் கிடமிருந்து நீங்கள் அனுமதி பெற்றிருந்தால் நான் இவனே விடுதலை செய்கிறேன். இல்லாத வரையில் அவன் இங்கேயே தங்க வேண்டியதுதான். இது வரைக்கும் கமிஷனர் இருக்குமிடத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை” என்ருன். “என்னல் முடியும்” என்று லெய்வா சுருக்க மாகச் சொன்னுள். இப்பொழுது அவனுடன் தனி மையில் பேச விரும்புகிறேன் நான். அவனை நல்ல முறையில் நடத்துங்கள் நீங்கள். நாளை தோழர் டெங்கினிடமிருந்து உங்களுக்குத் தொலை பேசிச் செய்தி கிடைக்கும்” என்ருள். காவலாளி விஷயத்தை மனத்தில் வாங்கிக் கொண்டான். "அப்படியென்றல் இதுதான் வழி” என்று கதவைப் பூட்டிக்கொண்டு சொன்னன் அவன்; அவர் களை முன்புறமிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென் முன். அங்கு ஒரு பெஞ்சும் மேஜையும் இருந்தன. மேலே மையத்தில் மச்சு விளக்கு இருந்தது; "நீங்கள் இப்போது வெளியில் போய் கதவை மூடிக்கொள்ளுங்கள்?" என்று அதிகாரத் தொனியில் சொன்னுள் லெய்வா. காவலாளி தோள்களைக் குலுக் கியபடி நகர்ந்தான். அசாய் அப்போதும் நின்று கொண்டிருந்தான். 'வா, வந்து உட்காரு!” என்று அவன் அருகில் இருந்த இடத்தைச் சுட்டினுள் அவள். அசாய் வந்து அமர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/205&oldid=1274937" இலிருந்து மீள்விக்கப்பட்டது