பக்கம்:இலட்சிய பூமி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206


‘'நீ பயந்துவிட்டாயா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள். "ஆரம்பத்தில் நான் பயந்து போனேன்; ஆளுல் எப்படியோ ஒரு வழியில் நான் தப்பிவிடுவேன் என் பதையும் நான் அறிவேன். வாலிபர் கூட்டுறவு சங்கத்தின் தலைவன் நான். அவர்கள் என்னைக் கைது செய்ய முடியாது.” "அவர்கள் உன்னை நியாய விசாரணை செய்தால் என்ன ஆகும்? நான் வெகுளித்தனமாகப் பேசிவிட் டேன். கவனமாகக் கேள். வடக்கே அனுப்பப்பட்ட வர்களுக்கு என்ன நடக்கிறதென்பதை நீ அறிவாய். நீ இங்கிருந்து தப்பி வெளியேறி எல்லையைக் கடந்து ஹாங்காங்குக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதற்கு முயற்சி செய்.” “ஹாங்காக்குக்கர்?" "அங்கு போவதற்கு நீ விரும்புவாயல்லவா? ஏனென்ருல் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு உனக்கு இங்கே மன நிம்மதி இருக்காது. இங்கிருந்து நீ வெளியேற உனக்கு உதவவே நான் வந்திருக்கிறேன். நீ ஹாங்காங் வர விரும்பினல் என்ளுேடும் ஃபானேடும் நீ வரலாம். நாங்கள் நாளை இரவு புறப்படுகிருேம்." அசாயின் கண்கள் அகல விரிந்தன. "ஹாங்காங்குக்கா?” 'சத்தமிடாதே நீ வர் விரும்புகிருயா?" இணக்கமுடன் தலையை அசைத்தான் அசாய். "சரி; நான் உன்னிடம் சொல்கிறேன். வேறு யாரிடமும் நீ சொல்லக்கூடாது. நாம் மூவர் மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/206&oldid=1274938" இலிருந்து மீள்விக்கப்பட்டது