உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207


-அதாவது ஃபான், நீ, நான் ஆகிய மூவர் மட்டுமே புறப்படப் போகிருேம்!” "நான் முதலில் வெளியேற வேண்டும். அதற் குத் திட்டம் வகுத்தாகிவிட்டதா?” "கவனித்துக் கேள். இங்கிருந்து உன்னை நாளைக்கு அழைத்துச் செல்கிருேம் நாங்கள். உன்னை விடுதலை செய்யும்படி தொலை பேசித் தகவலொன்று வரும். அப்படி வரவில்லையென்ருல் நீ இங்கிருந்து வெளி யேறி எப்படியோ எங்களை வந்தடைய வேண்டும். நாளைக் காலையில் உனக்குப் பணம் கொண்டு வந்து தருவேன். அவர்கள் இப்போது மனம் குழம்பிக் கிடக்கிருர்கள். கமிஷனர் டெங்பிங்கிடமிருந்து தகவல் வந்ததா என்று அவர்களைக் கேட்டுக்கொண் டிரு. அதற்கான ஏற்பாட்டை அவர்கள் நம்பும் வகையில் செய்துவிடுவார் ஃபான். டெங்பிங்கின் இருப்பிட விவரம்பற்றிய ரகசியம் ஒன்றுதான் நான் இவர்களை ஆட்டிவைக்க உதவக் கூடியது.” என்ருள் புன்னகையுடன். அங்கிருந்து புறப்பட்டு நகரத்துக்கு வெளியே உள்ள ஓர் இடத்தில் பஸ் ஏற வேண்டியதற்கான விவரங்களை அவனுக்கு அவள் சொன்னுள். ஹாங்காங் கிலிருந்த ஃபானின் ஏஜண்டின் முகவரியையும் அவனிடம் கொடுத்தாள். - புறப்படும் பொழுது, டெங்பிங்கிடமிருந்து தொலைபேசிச் செய்தி வருமென்றும் பையனை முறையோடு நடத்தும்படியும் காவலாளிகளிடம் கூறிஅசாயிடம்விடை பெற்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/207&oldid=1274939" இலிருந்து மீள்விக்கப்பட்டது