உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 9 இருபத்திரண்டு ஆண்டுகள் மக்களுக்கு அன்புப் பணிசெய்தபிறகு, சீனவைவிட்டு தான் புறப்படும் தேதியை செப்டம்பர்-28 என்று தன்னுடைய நாட் குறிப்பில் குறித்து வைத்திருந்தாள் சகோதரி ஆங்கெலிகா. காலையில் ஆகாயம் மந்தாரம் போட்டிருந்தது. சீதோஷ்ண நிலையின் திடீர் வீழ்ச்சி, ரம்யமான ரெயில் பயணத்துக்கு உகந்ததாயிருந்தது. அவளது இரண்டு கைப்பெட்டிகளும் கட்டப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. தன்னைப் பயணப்படுத்த வர வேண்டாமென்று ஆஸ்பத்திரியிலிருந்த தன் சிநேகி தர்களிடம் அவள் சொல்லியிருந்தாள். கெளலுரன் செல்லும் முதல் ரெயில் 10-45க்குப் புறப்பட இருந்தது. . . தங்களது பயணம் பற்றிச் சொல்லவும், தாங்கள் சந்தேகிக்கப்படாமல் இருக்கும் வகையில் தன் னுடைய துப்பாக்கியைக் கேட்கும் பொருட்டும் கட்சித் தலைமை இருப்பிடத்துக்கு ஒன்பது மணிக்குச் சென்ருன் ஜேம்ஸ் தாயெர். - தலைமை அலுவலகத்தில், மின்னிக்கொண் டிருந்த துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த குத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/208&oldid=752775" இலிருந்து மீள்விக்கப்பட்டது