உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209


வாள்களின் வளையத்தை அவன் பார்த்தான்.இரும்புத் தொப்பிகள் அணிந்த இருபது-முப்பது சிப்பாய்கள் இடைவெளிகளில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அங்குள்ளவர்களில் இளம் பிராயமுள்ள ஒல்லி யான லெஃப்டெனென்ட் ஒருவனிடம் ஜேம்ஸ் நடந்து சென்ருன். அவனுக்கு வயது அநேகமாய் இருபது அல்லது இருபத்தொன்றிருக்கும். தன் தஸ்தாவேஜுகளை அவ னி ட ம் காண்பித்தான் ஜேம்ஸ். "நாங்கள் இன்று இங்கிருந்து கிளம்புகிருேம். இதைத் தெரிவிக்க விரும்புகிறேன். நான்.” அவனுடைய பிரயாண அனுமதிச் சீட்டை புரட்டியவாறு, "எங்கே உங்கள் அத்தை?’ என்று லெஃப்டெனென்ட் கேட்டான். 'மதப்பிரச்சாரசபை இல்லத்தில் இருக்கிருர்கள். அவர்களின் வெளியேற்றம் சம்பந்தமான எல்லாத் தஸ்தாவேஜுகளும் வரிசைக்கிரமமாக அவர்களிடம் இருக்கின்றன.” 'அங்கு வேறு யாரும் இல்லை போலிருக்கிறது. நீங்களே ஆகவேண்டியதைக் கவனித்துக்கொள்ள லாம்" என்ருன் லெஃப்டெனென்ட். 'என் துப்பாக்கியைத் திரும்பிப்பெற விரும்பு கிறேன். மூன்று தினங்களுக்கு முந்தி நான் இங்கு வந்துசேர்ந்தேன். நான் இங்கிருந்து புறப்படும் சமயம் அதைத் திருப்பிக்கொடுப்பதாக அதிகாரி உறுதி சொன்னர். உள்ளே போய் அதைப் பார்க்க GvITLDĪT?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/209&oldid=1274940" இலிருந்து மீள்விக்கப்பட்டது