உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210


'உள்ளே யாரும் நுழையக்கூடாது. எனக்குத் தெரிந்தமட்டில் அது அநேகமாக சேதமடைந்த பொருள்களோடு சேர்ந்து எரிந்து போயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். உங்களுக்கு இவ் விஷயமாக உதவிசெய்ய மு டி ய ா.ெ த ன் று நினைக்கிறேன்." : - அரைமைல் தொலைவில் இருந்த படைத்தலைவர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு அவன் ஜேம்ஸிடம் சொன்னன். சிறப்பான வடக்கத்தியப் பிரதேச மொழியில் லெஃப்டெனன்ட் பேசியதை ஜேம்ஸ் கவனித்தான். - - "நீங்கள் இவ்விடத்திற்குப் புதிது, அப்படித் தானே?’ என்று அவன் கேட்டான். "நாங்கள் நேற்று வந்து சேர்ந்தோம்.” ஜேம்ஸ் புறப்பட்டுச் செல்லத் திரும்பினன். “சற்றே பொறுங்கள்.” அதிகாரி அவனை நோக்கி ஒரு அடி முன்னே வைத்தான். 'நீங்கள் ஒரு நிருபர் அல்லவே?” - 'அல்ல. என்னுடைய தஸ்தாவேஜுகளை நீங்கள் பார்வையிட்டுவிட்டீர்களல்லவா?” "இதைப்பற்றியெல்லாம் அறிந்து கொண்டு எங்களைப்பற்றி தவருன விஷயங்களை சொல்லிவிட மாட்டீர்களே? அவன் கண்கள் அவனையறியாமலே, கட்சி அலுவலகத்தின் சேதங்களை அளந்தன. "நான் எதற்காகச் சொல்லப்போகிறேன்? நாங்கள் சீன மக்களின் நெருங்கிய நண்பர்கள். உங்கள் ஆட்கள்தாம் என் அத்தையை வெளியேற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/210&oldid=1274941" இலிருந்து மீள்விக்கப்பட்டது