உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21i விட முனைந்து நின்றனர். அவர்களுக்கு இங்கிருந்து கிளம்பவே இஷ்டமில்லை.” ஜேம்ஸ் படைத்தலைவர் அலுவலகத்துக்குச் சென்ருன். அவர்கள் பகிரங்கமாகவும் சட்டரீதியான முறையிலும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்; அவன் அத்தை அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந் தாள்; பயணச் சாமான்கள் தயாராகாததால் அவன் அடுத்துள்ள ரெயிலில்தான் செல்லவேண்டும்; சுருக்க மாகச் சொன்னுல், அவனது மறைந்து செல்லும் செயல் இயன்றமட்டில் சந்தேகமோ பரபரப்போ இ ல் லா த வாறு அமையவேண்டும். விவரங்கள் எல்லாம் தஸ்தாவேஜுகளில் பதிவு பெற்றுவிட வேண்டுமென்று அவன் விரும்பினன். நிகழ்ச்சிகள் மாறிவிட்டன; இராணுவ வீரர்கள் எல்லாக் குறுக்குச் சாலைகளிலும் நியமிக்கப்பட்டார் கள்: நகரம் தன்போக்கில் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவப் படைகள் வந்து சேர்ந்ததும், பொதுமக்களாலான காவல் அணி திரும் பியதும் ஒருவகைப்பட்ட நம்பிக்கை யுணர்ச்சி மீட்கப்பட்டிருந்தது. யொவாங்மியோ கோயிலைக் கடந்தான்; பள்ளிப் பிள்ளைகள் முற்றத்தில் விளை யாடிக்கொண்டிருந்ததைக் கண்டான் அவன். . . படைத்தலைவர் அலுவலகத்துக்கு அவன் விஜயம் செய்தது பயனற்றதாய்விட்டது. குழப்பம் மிகுந்த வார முடிவுக்குப்பின், யாருக்கும் எதைப்பற்றியும் எதுவும் தெரியாமல் இருந்தது. தொலைபேசிகள் சுறுசுறுப்புடன் இருந்தன. யாரும் அவனைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை. தற்காலிகமான அலுவல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/211&oldid=752779" இலிருந்து மீள்விக்கப்பட்டது