உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212


கத்தை விட்டுப் புறப்பட்டுக்கொண்டிருந்த கட்சி அதிகாரி ஒருவரைப் பார்க்க முனைந்தான். பிரயா ணம் குறித்து அறிவித்ததை இந்த ஆள் அறிந்திருந் தான் என்பதை அவன் உறுதிப்படுத்திக்கொண் டான். ஊரடங்குச் சட்ட அமல்பற்றி அப்போது அலு வலகத்திலும் வேறு இடத்திலும் அறிவித்த சுவ ரொட்டிகளினுல் அவன் வெகுவாகக் கவலைகொண் டிருந்தான். இருட்டியதும் தெருக்களிலே யாரும் நடமாடக்கூடாது. ஈஸ்ாவின் திட்டத்திற்கு இணங்க அவர்கள் ஏறிச் செல்வதாயிருந்த இரவு நேர பஸ்ஸிற்கு என்ன நேருமோ? இந்தப் பயணம், அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக அவனை அலைய வைத்தது; அவன் திரும்பியபொழுது பத்து மணிக்கு மேலாகி விட்டது. "நான் ஈஸுவைச் சந்திக்கவேண்டும்” என்று அவன் தன் அத்தையிடம் சொன்னன். அவள் புறப் படத் தயாராயிருந்தாள். 'நமக்கு இன்னும் சில நிமிஷங்களே இருக் கின்றன. நான் ஆஸ்பத்திரிக்குச் சென்று என் சிநே கிதர்களிடம் போய் வருகிறேன் என்னும் வந்தன மொழி சொல்லி விடை பெற்றுவர ஆசைப்படு கிறேன்.” "நானும் உங்களோடு வருகிறேன்” என்ருன் ஜேம்ஸ். - - "வா; ஆனல் ஆஸ்பத்திரியில் ஐந்து நிமிஷத் துக்கு மேலாக நாம் தங்க முடியாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/212&oldid=1274942" இலிருந்து மீள்விக்கப்பட்டது