உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 3 பாதையின் மறுகோடியில் ஸிஸ்டர் ஆங்கெலிகா சகிப்புத்தன்மையின் பெருமூச்சுடன் கூறினுள்: "ஆம்; இன்றுதான் கடைசி தினம். நான் பிரிந்து போகப் போகிறேன் என்பதை என்னல் நம்பவே இயல வில்லை’ புதிரான புன்சிரிப்புடன் அவள் மேலும் சொன்னுள்: "சைனுவிலுள்ள ப்யூரிட்டன்களிலே அநேகமாக நான்தான் கடைசியானவள் என்று கருதுகிறேன்.” அலுவலாளர் குழாத்துடன் அவர்கள் வந்தன மொழி பரிமாறிக்கொண்டார்கள்; ஆளுல் ஈலமட்டும் அங்கு இல்லை என்பதை அவர்கள் உணர்ந் தார்கள். நோயாளி ஒருவர் தன்னைப் பார்க்க விழைந்ததாக ஜேம்ஸ் அறிந்து ஆச்சரியமடைந் தான். முன்தினத்தில், பாலத்தில் இறந்தவள் என்று கருதப்பட்டுக் கிடந்த ஒருத்தியை ஆஸ்பத்திரிக்குத் துரக்கிக்கொண்டு வந்தானே, அதே வயதான அம்மாள்தான் அது! நேரம் சுருக்கமாக இருந்தது: எனினும், அவளுல் மறுக்க முடியாதென்பதை எண் னினன். அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்; குழி விழுந்த முகத்திலிருந்து இரண்டு பெரிய கறுப்புக் கண்கள் அவனை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஜேம்ஸ் அக்கண்களைத் தான் பார்த்தான். - - அந்த அம்மாள் அர்த்தமில்லாமல் ஏதேதோ பிதற்றினுள். உள்ளங்கைகளை ஒன்று சேர்த்துக் குவித்து இடுப்பை வளைத்து மூன்றுதரம் அவள் வணங்கிளுள். ஜேம்ஸுக்கு ஒரு வார்த்தைகூட புரிய 14 - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/213&oldid=752781" இலிருந்து மீள்விக்கப்பட்டது