உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214


வில்லை. 'மறுபிறப்பின் தந்தை'யாக அவனை அவள் நினைத்து அவனுக்கு நன்றி சொன்னதாக நர்ஸ் அர்த்தம் சொன்னுள். "மெய்யாகவே அவள் நிலைமை பரிதாபகர மானது; தன் குழந்தையையும் மாமியாரையும் இழந்தாள். கணவனே அவளால் கண்டுபிடிக்க முடிய வில்லை. அவர்கள் எல்லோரும் நள்ளிரவில் தப்பி விட்டார்கள்.” இதயம் நெகிழ்ந்ததைவிட கோபம்தான் மிஞ்சி யது ஜேம்ஸுக்கு. "நான் இவள் உயிரைக் காப் பாற்றி என்ன புண்ணியம்? இந்த அம்மாளுக்கு என்ன நேரப்போகிறதோ, என்னவோ?’ என்று அவன் தன் அத்தையிடம் சொன்னன். 'நான் இங்கிருந்து கிளம்ப கொஞ்சமும் விரும் பாதது ஏன் என்று, இம்மாதிரியான நடப்புக்களை நீ காணும்போது உனக்கு நன்ருக விளங்கும்.” அச்சமயம், அவர்கள் அந்த அம்மாளிடம் விடை சொல்லி, ஆறுதல் அடையும்படி கேட்டுக்கொண் டார்கள். அவள் கண்ணிர் விட்டாள். அவன் அதைப் பார்த்தான். பாவம், அவளுக்கு யாரும் ஆதரவில்லை. மீண்டும் அவள் அவனுக்குத் தலை வணங்கினுள். எலிஸ்டர் ஆங்கெலிகா, தன் மருகன் பக்கம் திரும்பி, நான் அறிந்ததுபோல் சீன மக்களின் அருமையை நீயும் அறிந்திருந்தால், நீ புரிந்து கொள்ள முடியும் அவள் தான் இறக்கும் பரியந்தம் of இந்து மதத்தைப்போன்று சீனப் பழைய மதமும் மறு பிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தது. - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/214&oldid=1274943" இலிருந்து மீள்விக்கப்பட்டது