உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:17 பணி பதினென்றரை, தலையைக் கீழே சாய்த்த வண்ணம், மருத்துவமனைப் புல் தரையைக் கடந்தாள் ஈஸ்". அவளைக் கவனித்துக்கொண்டு, வீட்டினுள்ளே அவன் பொறுமையாகக் காத்திருந்தான். அவள் ஒருவகை நடன அமைப்புப் புள்ளிகளுடன் கூடிய நீல நிறப் பருத்தி ஆடை உடுத்தியிருந்தாள். தாழ்ந் திருந்த ஆலமரக் கிளைகளை அவள் கடந்தபோது, கண்களை உயர்த்தி, கதவடியில் அவன் காத்திருந் ததைக் கண்டாள். அவள் கண்களின் ஒளி பீதியூட் டும்படி கடுமையாக இருந்தது; ஆனல் அவளது உதடுகளில் தவழ்ந்த, அபூர்வமான, புன்னகை அவள் உள்ளத்தைக் காட்டிக்கொடுத்தது. அவன் கதவை தயாராகப் பற்றிக்கொண்டான்; 'உள்ளே வா' என்ருன். r 'இல்லத்து வேலைக்காரப் பையன் சுற்றுப்புறத் தில் இருக்கிருன?’ என்று தாழ் குரலில் கேட்டாள் அவள். 'இல்லை, அவனை என் அத்தை வெளியே அனுப்பி விட்டாள். இப்போது நாம் மாத்திரமே இருக் கிருேம்.” ஈஸ் தன் உள்ளத்துணர்ச்சிகளை வெளிப்படை யாகத் தெரிவிக்க முடியாமலிருந்தாள். சொல்ல வேண்டியதை அவள் தன் கண்கள் மூலம் சொன்னுள். அவளிடமிருந்த மரியாதை, நிதானம் ஆகியவற்றின் அபரிமிதமான சக்தியை-எந்த ஒரு நிலையையும் ஆழ்ந்த மெளனத்தால் எதிர்த்துச் சமாளிக்கும் ஆற்றலையும் அவன் உணர்ந்துகொண்டான். “என்னுடைய செய்தி உனக்குக் கிடைத்ததா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/217&oldid=752785" இலிருந்து மீள்விக்கப்பட்டது