உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225


பலகையைவிட்டுப் படகின் அடிப்பகுதிக்கு தன்னு டைய நீண்ட கால்களைப் பரப்பியவாறு அவலட்சண மாக நடந்து வந்தான். “உங்களுக்கு வசதியாக இருக்கிறதா, அப்பா?” என்று விசாரித்தாள் ஈஸ்". "செளகரியமாக இருக்கிறது. இப்போது மணி என்ன?” “நாலே முக்கால்.” "நாம் ஃபானை எத்தனை மணிக்குச் சந்திக்க முடியும்?' என்று ஜேம்ஸ் மெல்லிய குரலில் கேட் டான். 'ஒன்பது மணிக்குப் பிறகு தன்னைச் சந்திக்கும் படி அவர் சொன்னர். ஒன்பது மணி அளவில் அங்கு இருப்பதாக உறுதி கூறியுள்ளார் அவர்.” "அதுவரை நாம் என்ன செய்யலாம்?” "சற்று பொறுங்கள். அங்குதான் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும்.” “ஃபானை நாம் எங்கே சந்திப்பது?” "த்ரீ காம் பர்ஸில் சந்திக்க வேண்டும். இங்கி ருந்து சுமார் அரை மைல்தான் இருக்கிறது அந்த இடம்.” 'அந்த இடம் உனக்குத் தெரியுமா?” 'நான் அங்குதான் பிறந்தேன் என்பதை மறந்து விடுகிறீர்களே!...” என்று பதிலளித்தாள் ஈஸு. 'மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருப்பதால் புகழ் பெற்றுள்ள டுடிமியோ-மாவட்டத் தேவாலயம் அங்கு உள்ளது” என்று தொடர்ந்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/225&oldid=1274951" இலிருந்து மீள்விக்கப்பட்டது