உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226


சிறுவன் ஸ்ப்ரெளட் பெரியவர்கள் பேசி முடிக் கும்வரை காத்திருந்தான்; பிறகு, "அசாய் அங்கு இருப்பானல்லவா?” என்று தன் மனத்திலிருந்ததை ஆவலுடன் கேட்டான். “எனக்குத் தெரியவில்லை; அநேகமாக அங்கு இருப்பான் என்றே நம்புகிறேன்” என்ருர் அவ னுடைய தாத்தா. இலையுதிர்காலத்தின் நாட்டுப்புறத் தோற்றம் அழகாக இருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்த மலைச் சிகரங்கள் மேகங்களால் கவிந்திருந்தன. அப் பொழுதுதான் சூரியன் மறுபடியும் வெளிக் கிளம்பி ன்ை பள்ளத்தாக்கின்மீது மென்மையான கதகதப் பைப் பரப்பினன், ஆரஞ்சுத் தோட்டங்களும் காய் கறி வகைகளும் நிரம்பிய மலைப்படுகைகள் வர்ணப் புள்ளிகளாகத் திகழ்ந்தன. ரோந்துப் படகு ஒன்று பாலத்தைச் சுற்றி, பிறகு தாங்கள் உள்ள திசையில் வந்துகொண் டிருக்கும் சத்தம் அவர்களுக்குக் கேட்டது. ஜேம்ஸ் கீழேயிருந்து எட்டிப்பார்த்தான். - "எல்லோரும் கீழே இறங்கிக்கொள்ளுங்கள்" இரையாமல் சொன்னன். எல்லோரும் படகின் அடிப்பகுதிக்கு இறங்கி அமைதியாக இருந்தனர். அந்த வயதான அம்மாள் மட்டும் படகின் முன்புறத்தில் கால்களை மடக்கிக் குந்தியபடி, அசையாமல் இருந்தாள். படகு மெது வாக நகர்ந்துகொண்டிருந்தது. ரோந்துப் படகின் சத்தம் வரவர நெருங்கி, இருபது முப்பது அடி தூரத்தில் கேட்டது. சிறுவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/226&oldid=1274952" இலிருந்து மீள்விக்கப்பட்டது