உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227


ஸ்ப்ரெளட் ஏதோ முணுமுணுக்கத் தொடங்கினன். ஜேம்ஸின் தலைக்கு மேலே முகம் கவிழ்த்துப் படுத் திருந்த ஈஸ் சட்டென்று அவன் வாயைப் பொத்தி ள்ை. இயந்திரத்தின் இயக்கம் குறைந்து, மிக மெல்லிய ஓசை மாத்திரம் கேட்டது. பத்து விடிை நேரம் கவலையுடன் கழிந்தது. ஆற்றின் மறுகரைக் குச் செல்ல தண்ணிரை அரை வட்டமாகப் பிளந்து சென்றபோது படகின் இயந்திரம் வேகமாக இயங் கியது; நகரத்திற்குத் திரும்பும் வழியில் சத்தமிட்டுக் கொண்டே சென்றது. ஈஸ் எழுந்து உட்கார்ந்து வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, 'அவர்கள் போய்விட்டார்கள்” என்று மெதுவாகச் சொன்னுள். டுவானும் மற்றவர்களும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டவண்ணம் மறுபடியும் அமர்ந்தார்கள். ரோந்துப் படகு வந்தபோது வளைவுப்பகுதியில் உட்கார்ந்திருந்த அந்த அம்மணி துளிக்கூட அசைய வில்லை. அவள் ரோந்துப் படைகளை அலட்சியத் தோடும், அவமதிப்போடும் பார்த்துக்கொண்டிருந் தாள். அடியில் அமர்ந்திருந்தவர்களுக்கு அவளே ஒரளவு பாதுகாப்பாகவும் உதவினுள். கூடுமானவரை யில் அசல் குடியானவப் பெண்ணப்போலவே கரை கட்டுடன் கூடிய நீண்ட கைகள் உள்ள கைத்தறி மேலங்கியுடனும், கறுப்புநிறக் கால்சட்டையுடனும் அவள் காணப்பட்டாள். வழி நெடுகிலும் அவள் மெளனமாகவே இருந்தாள். காரணம், தன்னக் குடியானவர் வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/227&oldid=1274953" இலிருந்து மீள்விக்கப்பட்டது