உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228


அவள் கருதிக்கொண்டிருந்தாள்; உட்புறம் இருந்த வர்கள் பேச்சுக் கொடுத்தாலொழிய, அக்குழுவின ருடன் அவள் பேசுவதில்லை. ரோந்துப் படகு போன பின்னரும் அவள் தன் மெளனத்தைக் கலைக்கவில்லை. "அவள் பெயர் என்ன?” என்று ஜேம்ஸ் கேட்டான். "ஸ்வாட் அல்லது ஆஸ்வாட்!” என்று பதில் சொன்னுள் ஈஸ்". . "அவளிடம் நீ அந்த யோசனையைத் தெரிவித்த போது, அவள் என்ன சொன்னுள்?” நாம் அவளை ஹாங்காங்குக்கு அழைத்துச் செல்லப் போவதாக அவளிடம் சொன்னேன். எடுத்த எடுப்பில் அவளால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அவள் அங்கு வருவதை நீங்க ள் விரும்புவதாக அவளிடம் தெரிவித்தபோது, அவள் கொஞ்சமும் தயங்கவில்லை, "அவள் நிரம்பக் கேள்விகள் கேட்டாளா?” 'வாயை மூடிக்கொண்டு என்னைப் பின் தொட ரும்படி அவளிடம் நான் சொன்னேன். என் வழியை நான் அறிவேன்; நாங்கள் வேகமாக அங்கிருந்து வந்துவிட்டோம். அவள் தனது துயரங்களை எல்லாம் மறந்தாள். நாட்டுப்புறத்து மனிதர் யாரும் தன் உயிரைக் காப்பாற்றிய மனிதரை ஒருபோதுமே மறக்கவேமாட்டார்கள் என்பதை நீங்கள் பிறகு உணர்வீர்கள். நம்முடைய வேலைக்காரியாக இருப் பதற்கு அவள் மகிழ்ச்சியடைவாள்!" 'அப்படியே செய்யலாமே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/228&oldid=1274954" இலிருந்து மீள்விக்கப்பட்டது