உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있3 தெரிந்துகொள்ள ரொம்பவும் ஆசையோடு இருக் கிறேன்.” " நீங்கள் சரியாகவே பேசியிருக்கிறீர்கள். கம்யூன் எனப்படும் சிறு நகராட்சிப் பிரிவின் உறுப்பு கள் ஒன்று சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யும் அமைப்புத் திட்டத்தைப்பற்றி அறிவிப்பு அழுத்த மாக இருக்க வேண்டும். நீங்கள் சரியாகவே அறி வித்தீர்கள். ஆனல் கடைசியில்தான், அதாவது, நீங்கள் பொது ஜனங்களின் ஒத்துழைப்பைக் கோரிய போதுதான், சரியாக அமையவில்லை, இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கியிருக்க வேண்டும். அத் துடன், கட்சி'க்கும் பொது ஜனங்களின் உரிமை களுக்கும் உள்ள ஒருமையையும் அழுத்தமாக எடுத் துரைக்க வேண்டும். ஊம்!....உங்கள் குரலில் கொஞ்சம் கோபம்-எரிச்சல் தொனித்தது!...” . "அப்படியா?....நான் அதற்காக மிகவும் வருந்து கிறேன். நாளைக்கு இன்னும் நல்லவிதமாக என் கட மையைச் செய்துவிடுவேன்!” "நாம் இப்போது ராஜாங்க ஆக்கிரமிப்பாளர் களால் சூழப்பட்டுள்ள நேரம். ஆதலால், கட்சிக் கும் பொது மக்களுக்கும் உள்ள இறுக்கமான ஒற்று மையின் அக்கறையைப்பற்றி வலுவாக அழுத்திச் சொல்லுங்கள்!....அவர்கள் போக்லோவில் படை வீரர்கள் இருவரைக் கொன்றுவிட்டதாக அறி கிறேன், அதன் விருத்தாந்தம் என்ன?..." டெங்பிங் நடப்பைச் சொன்னன். உள்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டு விட் டார் க ள். அப்படைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/23&oldid=752799" இலிருந்து மீள்விக்கப்பட்டது