உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


பொறுப்பேற்றிருந்த தோழர் யுவானுக்கு ஆஸ்பத் திரியில் சுயநினைவு திரும்பியிருக்கிறது. இரும்பு ஊது உலேக்குத் தேவைப்பட்ட விறகுக்காக பத்து ஏக்கர் விஸ்தீரணமுள்ள காட்டை அழித்துப் பொட்ட லாக்கிவிட்டார்கள். இதல்ை போக்லோவில் அதி ருப்தி நிலவி வந்தது: கட்டாயத்தின்பேரில் ராணு வத்தில் சேர்க்கப்பட்டு அணைக்கட்டு வேலையில் உதவி செய்த தொண்டர்களில் அநேகர் அண்டை மாவட் டங்களிலிருந்து வந்தவர்கள்தாம். மரங்களையெல் லாம் வெட்டி வீழ்த்தும்படி உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டவுடன், படையணி மலைகளுக்குச் செல்வதற் குப் பதிலாக, கிராமத்துக்கு அருகில் இருந்த மரங் களை வெட்டி வீழ்த்தத் தொடங்கியது, உள்ளுர்க் காரர்களுக்கும் வெளியாட்களுக்கும் இடையே கூச்சலோடு கூடிய சண்டை நடந்தது. மலைப் பிராந் தியங்களிலிருந்து மரங்களை வெட்டுமாறு படை யணிக்கு டெங்பிங் ஆணையிட்டதும், சச்சரவு அமை தியுடன் தீர்வுபெற்றது. விறகு பஞ்சத்தைப்பற்றி போக்லோ உழவர்களின் மனைவிமார்கள் குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த வருஷம் அறு வடை முடிந்ததும், குடியானவர்களிடம் சுமார் இரண்டு மாதங்களுக்குக் காணும்படியான போதிய தானியங்கள் சேர்ந்திருந்தன. சோவியத் நாட்டுக் குக் கப்பலில் அனுப்பப்பட வேண்டிய தானியப் பங்கை இவ்வகையில் சரிக்கட்ட கட்சியின் உள்ளூர் அலுவலகம் விரும்பியது. குடியானவர்கள் புகார் செய்தார்கள். அங்கங்கே உறுதிமொழிகளும் கிடைத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/24&oldid=1274809" இலிருந்து மீள்விக்கப்பட்டது