பக்கம்:இலட்சிய பூமி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நேற்றையக் கலகம், கேவலம் ஓர் எலியினல் ஏற்பட்டுவிட்டது. மழையின்போது, தானியக் களஞ்சியத்தின் கூரைக் கட்டில் இடைவெளி இருந் ததையும், அதன் காரணமாக ஓர் வயல் எலி உள்ளே போய் அரிசி மணிகளைக் குதறி வெளியே வீசியிருந்ததையும் வயதான ஒர் உழவன் கண்டு பிடித்தான். அரிசித் தான்யங்கள் நிறம் மங்கியும் கெட்டும் போயிருந்தன. தானிய சேதத்தினுல் குடி யானவனின் ரத்தம் கொதித்தது. அறுவடை செய் யப்பட்ட ஒவ்வொரு தானிய மணியும் உழவனின் நெற்றியிலிருந்த ஒவ்வொரு வேர்வை மணியைக் குறித்தது. வீணடிக்கப்பட்ட தானியங்களைப்பற்றிய பழங்காலச் சம்பிரதாய உணர்வு இன்னமும் நிலவி யது. அவன் காரியதரிசியைக் கண்டு பேசினன். ஆனல் யூவான் எல்லாம் நல்லபடியாக இருப்பதாக உறுதி சொன்னன். தன்னுடன் சேர்ந்த மூன்று நான்கு உழவர்களே யும் கூட்டிக்கொண்டு போய் அந்தக் காரியதரிசி யைத் துாண்டியதன்பேரில், தானியக் களஞ்சியத்தை அவர்கள் பார்க்க முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே புரிந்துவிட்டது. தானிய மணிகள் உப்பிக் கிடந் தன; அவற்றின் நிறமும் கறுத்துவிட்டது. இந்தச் செப்டம்பர் உஷ்ணத்தில் சில முளைக்கவும் ஆர்ம்பித் திருந்தன. சிறு வயசுக் குடியானவன் ஒருவன் உள்ளூர் கமிஷனரைச் சுவரில் சாய்ந்துகிடந்த கடப் பாறையால் தாக்கினன். பேய் பிசாசைக் கண்ட மாதிரி உழவர்கள் வெளியேறினர்கள், வெளிப் புறத்தில் பெரும் திரள் கூடிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/25&oldid=752821" இலிருந்து மீள்விக்கப்பட்டது