பக்கம்:இலட்சிய பூமி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 கோபமூட்டப்பட்ட ஆடவர்களும் பெண்களும் உள்ளே பாய்ந்து, கண்ணில் தென்பட்ட பாத்திரம், கூடை முதலியவற்றைக் கொண்டு தானியங்களை வாரி அள்ளிக்கொண்டார்கள். உடனே இராணு வம் வந்தது. நாலைந்து பேர்கள் கைது செய்யப்பட் டார்கள். பொதுத் தானியத்தை ஒரு கூடை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு பின்தங்கி நின்ற போது கையும் களவுமாகப் பிடிபட்ட வயதான கிழவி ஒருத்தியும் அவர்களிடையே இருந்தாள். பிறகு நேற்று, கூரிய ஆயுதங்களால் இரண்டு படை வீரர்களின் முதுகுகளில் குத்தி ஒழித்துகட்டி படுத்திவிட்டார்கள்! 'மேற்கொண்டு நீங்கள் என்ன செய்ய உத்தே சம்?” என்று வினவினன் லெங். "இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏற்பட்டதற்காக நான் வருந்துகிறேன். இவ்விஷயமாக உங்களுடைய ஆலோசனையைப் பெறவே விரும்புகிறேன்!” 'இல்லை. உங்கள் யோசனையைக் கேட்கத்தான் நான் ஆசைப்படுகிறேன்!” டெங்பிங் நிதானமான யோசனையுடன் பேச லாளுன் "கலகம் தடை செய்யப்பட வேண்டும். உழவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நான் ரேஷ னேக் குறைத்துவிட முடியும்; அல்லது, ஆரஞ்சு போன்றவற்றின் தீர்வையை அதிகரித்துவிடுகிறேன். இப்படிப்பட்ட தீச்செயல்கள் மறுபடியும் நடக்கா மல் இருப்பதற்கு என்னுடைய இந்நடவடிக்கை அப் போது தான் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும். என் கவலையெல்லாம் தானிய மணிகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/26&oldid=752832" இலிருந்து மீள்விக்கப்பட்டது