உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


பற்றித்தான்! போக்லோவுக்கு நானே நேரில் போய் தீர விசாரிக்கப் போகிறேன். படையணி ஒன்றை யும் அங்கு அனுப்பியுள்ளேன். அந்தத் தான்யம் மெய்யாகவே உபயோகமற்றதாய் கெட்டுப்போ யிருந்தால், அதற்கு உடந்தையாக நிர்வாகத் துறை யில் உள்ள ஆள் கண்டிக்கப்பட வேண்டும்; அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும்!...” "தோழர் யூவான நீங்கள் சந்தேகப்படுகிறீர் «ΕωγΤΤΤ-2 "உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றல், நான் நினைப்பது அதுவேதான்! அந்த நபருக்குப் பதிலாக வேறு ஆள் நியமிக்கப்பட வேண்டும். அப்போது ஜனங்களும் அமைதியடைவார்கள்!” 'உங்கள் கருத்தும் சரியே. உணவு விடுதிக் கலகங்கள் காண்டனில் நடந்தன. மக்கள் பசியுடன் இருந்தபோது, அவர்களுக்கு அங்கே உணவு இல்லை: எனவே, அவர்கள் சமையலறைக்குள் பாய்ந்துசேதப் படுத்திவிட்டார்கள். இம்மாதிரி நடப்புக்கள் யதார்த்தமானவை; யாவராலும் புரிந்து கொள்ளக் கூடியவை. உண்மையிலேயே அவர்கள் கட்சிக்கு எதிரானவர்கள் அல்லவே அல்ல! பிங்ஷானில் ஒரு சம்பவம் நடந்தது!....பிங்ஷான் அரசாங்கப் பண்ணை யில் எனக்குத் தொடர்பு உண்டு. அங்குள்ளவர் களின் மனங்களை மெள்ள மெள்ளத்தான் மாற்றக் கூடும். போன வாரம் அங்கே கோழிக்குஞ்சு மாமிச விருந்தொன்று பிரமாதமாக நடந்ததாம், லெய்வா சொன்னள்,” என்று கூறினன் ஸெங்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/27&oldid=1274810" இலிருந்து மீள்விக்கப்பட்டது