உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


'யார் அந்த லெய்வா?” என்று கேட்டான் டெங்பிங். 'பெண்கள் தொழில் ராணுவப் பகுதியின் தலைவி அவள். அன்று நகரத்தில் இருந்த கோழிக் குஞ்சுகளில் பெரும்பாலானவை காணுமற் போய் விட்டதாக எனக்கு வந்த ரகசிய அறிக்கைகள் கூறு கின்றன, அங்கேயும் கம்யூன் எனப்படும் சிறு நகராட்சிப் பிரிவு அமைப்பு சீக்கிரம் ஏற்பட்டுவிடும். அங்குள்ள கோழிக்குஞ்சுகள் தேசீயமாக்கப்படுமுன், அவற்றை அந்தந்தக் குடும்பங்களில் கொன்று தின்னத் தொடங்கிவிட்டார்கள். பொதுவுடைமை மனுேபாவத்தின் உண்மையான நிலையை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஜனங்கள் எப்பொழுது தான் கல்வியறிவு பெறப்போகிருர்களோ?....” ஸெங் ஒருகணம் நிறுத்தினன். “கடுமை வேண் டாம்; உலகத்தின் முடிவுப் பகுதிக்கு நாம் இன்னும் வந்து சேரவில்லை.கம்யூன் என்னும் சிறுநகராட்சிப் பிரிவை அமைத்தாக வேண்டும். அது உங்களது கடமையாகும். ஆங்கிலேயன் ஒருவன் நேற்று வந்த தாகச் சொன்னீர்களே, இங்கே அவன் என்ன செய்து கொண்டிருக்கிருன்?..." . . " தன் மேலதிகாரியிடம் தஸ்தாவேஜிகளைக் காண் பித்தான் டெங்பிங், அரசாங்க ரீதியான சீனப்பயண சேவையின் ஹாங்காங் அலுவலகம் மூன்று வார் கெடுவுக்கு ஒரு பிரயாண அனுமதிச்சீட்டு வழங் கியது: நபரின் பெயர்: ஜேம்ஸ் தாயெர். வயது: முப்பத்திரண்டு. ஐந்தடி பதினுேரு அங்குலம் உயரம். பழுப்புநிறத் தலைமயிர் , பிரயாண அனுமதிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/28&oldid=1274811" இலிருந்து மீள்விக்கப்பட்டது