உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


சீட்டில், டாய்-ஜென்-என் என்னும் அவனது சீன மொழிப் பெயர் இருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்ஸெக்ஸ் அவனுடைய பிறப்பிடம், ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ, மற்றும் அன்ருடத் தேவைக்குரிய மின் சாரக் கருவிகள் முதலியவற்றை வியாபாரம் செய்யும் ஆங்கிலேய நிறுவனமொன்றின் நிர்வாகி அவன். 1948-51ல் பீகிங்கில் வசித்தான். வடசீன கூட்டுறவு மொழிப்பள்ளியில் பகுதி நேரப் போதக ராகவும் வேலை பார்த்தவன். 1949-51ல் யென்சிங் பல்கலைக் கழகத்தில் ஐரோப்பியக்கலை விரிவுரையாள ராகவும் பணி புரிந்தான். சீன மொழியின்பால் நேசம் பூண்டவன் எனவும், மன்டரின் மொழியை சரளமாகப் பேசுவதாயும் குறிப்பிடப்பட்டிருந்தான். சுறுசுறுப்பானவன்; சிநேகிக்கத் தகுந்தவன். மகிழ்ச்சி கரமான குணப்பாங்குடனும் தூய தோற்றத் துடனும் பொலிந்தவன். கொள்கைகள் ஸ்திர மற்றவை. பயணத்தின் காரணம்: வெய்ச்சோ மதப் பிரசார சபையைச் சேர்ந்த அவனுடைய அத்தை யான ஸிஸ்டர் ஆங்கெலிகா மக்கள் சீனக் குடி யரசை விட்டுப் புறப்படும்பொழுது அவளுக்குத் துணை செய்வான் அவன். 'அவன் ஒரு துப்பாக்கியைச் சுமந்து வந்தான். அதன் தொடர்ச்சி எண்ணை நான் குறித்துவைத்திருக் கிறேன். இந்தப் பிரயாணத்தில் அவனுக்கு இந்தத் துப்பாக்கி ஏன் தேவைப்பட்டது என்பதுதான் புரிய வில்லை. அவனுக்கு இது திரும்பக் கிடைக்காது. இந்த உண்மையை அவன் அறியான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/29&oldid=1274812" இலிருந்து மீள்விக்கப்பட்டது