பக்கம்:இலட்சிய பூமி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233


தயைக்கு-சமுதாய ரீதியான வாழ்வு முறைக்கு ஒரு பொருளாக தேநீர் இருந்தது. படகோட்டி ரொட்டியை விண்டு அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, 'பேஷ்.ரொம்பவும் நன்முக இருக்கிறது!” எள்முன். மற்றவர்களைப்போல் எனக்கும் ரேஷன் கிடைக் கிறது. நான் அரசாங்கத்துக்கு மீன் பிடிக்கிறேன். நான் மீன் பிடித்து கொடுக்கவேண்டிய பங்கிற்கு அதிகமாக நான் பிடித்தால், அதை நான் எனக் கென்று வைத்துக்கொள்ளலாம், ஹைஃபாங்கிலும் லாக்ஃபாங்கிலும் உள்ள செம்படவர்கள் ரொம்பவும் கஷ்டத்தை அனுபவிக்கிருர்கள் என்று நான் கேள்வி படுகிறேன். ரோந்துப் படகுகளின் கடுமையான மேற்பார்வையின்கீழ் அவர்கள் கடலில் கூட்டமாகச் செல்கிருர்கள். அவர்கள் பிடித்தவற்றையெல்லாம் ஒப்படைக்கிருர்கள்; அவர்கள் ஹாங்காங்கிற்குத் தப்பிச்செல்ல எத்தனம் புரிந்தால். ரோந்துப்படை யினர் அவர்களைச் சுடுகிரு.ர்கள்.” 'நீங்கள் பிடித்த மீன் என் கண்ணில்படுவதில்லை, சந்தையில் கொஞ்சமாகத்தான் கிடைக்கிறது.” “அதில் பெரும்பகுதி பதப்படுத்தி டப்பாக்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறதென்று. கேள்விப்படுகிறேன். டப்பாக்களில் அடைத்து மூடப் படும் பெரிய தொழிற்சாலை ஒன்றை டுங்வானில் அவர்கள் நிறுவி இருக்கிருர்கள். டப்பாக்களில் அடைத்து சரியானபடி மூடுவதற்கான வசதிகள் இங்கு இல்லை; ஆதலால், ஜனங்களுக்கும் ஏதோ கொஞ்சம் கிடைக்கிறது. ஆனால், டுங்வானில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/233&oldid=1274957" இலிருந்து மீள்விக்கப்பட்டது