பக்கம்:இலட்சிய பூமி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235


கெளமின்டாங் ஏற்றுக்கொண்ட வருஷம் அது!” என்ருன் அவன். 'உங்கள் மகன் எங்கே?" செம்படவனின் நெற்றிக்கோடுகள் விரிந்தன. “எனக்கு என்ன வயது இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று எதிர்க்கேள்வி கேட்டான் அவன். “உங்களுக்கு என் வயதுதான் இருக்கும். போற்றுதலுக்குரிய வயதான அறுபதை நீங்கள் எட்டி இருக்கமுடியாது. எனக்கு ஐம்பத்தொன்பது ஆகிறது.” “எனக்கு ஐம்பத்தெட்டுதான்!' “நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு விரைவிலேயே அறுபது ஆகிவிடவேண்டும்.” "ஆமாம். இன்னும் இரண்டு புதிய வருஷங்கள் வந்தால் எனக்கு அறுபது ஆகிவிடும். அது கேட்ப தற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனல் என்னைப் பாருங்கள். அறுபது வயதான கிழவன் நான். தனியாக இந்தப்படகை எதற்காக ஒட்ட வேண்டும்? என் மகனைப்பற்றி விசாரித்தீர்கள். நல்லது. பத்தாண்டுகளுக்கு முன்னர் அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. அந்த இரண்டாவது பாய் விரிப்பு அவன் திருமணத்துக்கு வாங்கியதுதான். பேரப்பிள்ளைகளுடன் கூடிய ஒரு குடும்பம்-ஒரு வம்சம் எனக்குக் கிட்டுமென்றும், எனக்கு வயசாகி விட்டால், அப்புறம் என்மகன் எல்லாப் பொறுப்புக் களையும் ஏற்றுக்கொள்வான் என்றும் நினைத்தே அவ்வாறு திட்டமிட்டேன். ஆனால், அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/235&oldid=1274959" இலிருந்து மீள்விக்கப்பட்டது