பக்கம்:இலட்சிய பூமி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அவனே ஓர் இரவில் அழைத்துச்சென்றுவிட்டார்கள்; அதன்பிறகு அவனே நான் ஒருபோதும் பார்க்கவே இல்லை. முதல் இரண்டு வருஷங்கள் அவன் வீட்டுக்கு கடிதம் எழுதினன். மஞ்சூரியாவிலும் பிறகு கொரி யாவிலும் அவன் இருந்தான். பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லை!” "அவனுடைய இளம் மனைவிக்கு என்னநேர்ந்தது' என்று கேட்டான் டுவான். "அவள் எங்களுடன்தான் தங்கியிருந்தாள். புது மணப்பெண்-தேன் நிலவை இன்பமாக அனுப விக்கவேண்டிய ஒர் இளம் மனைவிக்கு இக்கதி நேர்ந் தால் அது சாதாரண விஷயமா என்ன? அவள் தாயாக ஆவதற்கு இருந்தாள். அவ்வாறே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள், மற்ருெரு செம்ப டவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள்; ஆகை யால் எங்களுக்கு அவள் பெரிதும் உதவியாக இருந் தாள். பிறகு, குழந்தைக்கு மூன்றரை வயது ஆன போது ஒரு நாள் அக்குழந்தை அரசாங்கச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட வேண்டு மென்று உத்தரவு வந்தது. அவள் ஒப்படைக்க மறுத்தாள். குழந்தை எங்களுடைய உணவைச் சாப்பிட்டுக் கொண்டு எங்களுடன் தங்கியிருந்தது; அது யாருக் கும் எவ்விதத் தீங்கும் செய்யவில்லை.ஒரு யெளவனப் பெண் கமிஷனர் வந்து என் மருமகளிடம் பேசிள்ை: அப்போதும் அவள் தன் குழந்தையை ஒப்படைக்க மறுத்தாள். மறுநாளும் அந்தப் பெண் கமிஷனர் திரும்பவந்தாள்; அவளுக்குப் பதினறு வயதுக்குமேல் இராது. இருவரும் விவா தம் செய்தனர். தற்காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/236&oldid=752806" இலிருந்து மீள்விக்கப்பட்டது