உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249


இரண்டாயிரம் அடி உயரமுள்ள கோலநட் மலையை -டுங்ஹானை நோக்கி நாம் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிருேம். அதன் மூன்று சிகரங்களும் எல்லாத் திக்குகளிலிருந்தும் நன்ருகத் தெரியும். பிறகு அவைகளை உங்களுக்குச் சுட்டிக் காட்டு கிறேன். ஆனல் நாம் பகலில் ஒளிந்து இரவில் நடந்து வழியைக் கடக்க வேண்டும். இதை மறந்துவிடாதீர் கள்; அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியாயிருக்க வேண்டும்; இல்லையேல் நாம் தவறிவிடுவோம். நாம் எப்போதும் விடிவதற்கு முன் மறைவிடத்தை அடைந்துவிடும் வகையில் இரவு பயணம் திட்ட மிடப்பட்டிருக்கிறது. தன் இஷ்டம்போல யாருமே நடக்கக்கூடாது புரிந்ததல்லவா?.... - "இரண்டாவது: நாம் ஒரே குழுவாக இருக்கின் ருேம்; ஆயினும் பஸ்ஸிலோ அல்லது பிறர் முன்னிலை யிலோ புதியவிடத்திலோ நாம் தனித்தனியாக பிரிந்திருக்க முயற்சி செய்ய வேண்டும். வயதான டுவான் அவர்களே, நீங்களும் உங்கள் குடும்பத்தவ ரும் எப்போதும் ஒன்ருகவே இருங்கள். நீங்கள் பிங்ஷான்ஷியில் இருக்கிறீர்கள். தஸ்தாவேஜுகளை பிறகு தருகிறேன்; இப்போது அவை உங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் தற்சமயம் லுங்காங்குக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஏன் என்று கேட் காதீர்கள். அது யாருடைய அலுவலும் அல்ல." 'மூன்ருவது: பஸ்ஸில் இருக்கையில், இயன்ற வரை குறைவாகப் பேசுங்கள். சிறுவன் ஸ்ப்ரெளட் டைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது நலம். நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/249&oldid=1274967" இலிருந்து மீள்விக்கப்பட்டது