உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248


தில் எங்கோ ஓரிடத்தில் இருக்கிருன் எனறும் அறிந்துகொண்டேன். அவன் என் கட்டளைகளை சரியானபடி புரிந்துகொண்டான் என்று நம்பு கின்றேன்.” 'வியாஷவில் இன்றிரவு பத்தரை மணி பஸ்ஸைப் பிடிக்கும்படி அவனிடம் கூறினேன்; நகரத்திலிருந்து சரியான நேரத்தில் வெளியேறுவ தற்குத் தோதாக ஊரடங்கு சட்டம்பற்றியும் அவன் அறிந்திருந்தான்” என்ருள் லெய்வா. தங்கள் குழுவை நோக்கி இப்போது விவரித்துக் கொண்டிருந்தான் ஃபான்: 'நம்மில் இப்போது ஏழு பேர் இருக்கிருேம். அசாய் வருவானளுல் எட்டாகும். பஸ்ஸில் கூட்டம் இருக்கலாம். இருந்தபோதிலும், எல்லாம் சரியாகி விடும். நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலாவது: நம்மில் யாரும் மற்றவர்களைக் கலந்து சொள்ளாமல் எதுவும் செய்யக்கூடாது. என்னிடம் சரியான தேசப்படம் இருக்கிறது; என்னுடைய ஆட்கள் வழி முழுவதையும் நன்கு அறிவார்கள். பிங்ஷானுக் குச் சற்றுத் தாண்டி லுங்காங்குச் சரியாகக் கீழே பக்சியிலிருந்தும் சும்,சூனிலிருந்தும் பரவிய வண்ணம் எல்லை ரோந்துப் படைகள் ஆரம்பமாகின்றன. சட்டப்பிரகாரம், இருப்புப் பாதையின் இருமருங்கி லும் ராணுவப்படைகள் பரவி.யிருக்கின்றன. ஆகை யால் நீங்கள் எப்போதாவது வழி தவறினல் மேற்கே ஓடாதீர்கள். எப்போதும் ரெயில்பாதைப் பகுதியி னின்றும் அப்பால் தள்ளியே இருங்கள். சுமார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/248&oldid=1274966" இலிருந்து மீள்விக்கப்பட்டது