உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251


அங்கிருந்து புறப்பட்டதும் ஒவ்வொருவருக்கும் அவன் தைரிய முட்டினன். ஆபத்தான பிரயாண மொன்றில் தன் குடும்பத்தை அழைத்துச் செல்வ தாக டுவான்கூட உணர்ந்தான். "அப்பா உங்களால் நன்கு பார்க்க முடிகிறதா?” என்று ஈஸ் கேட்டாள். 'ஏதோ முடியும்!" இருந்தபோதிலும் அவள் தன் தந்தையின் பக்கத்தில் நடந்து சென்ருள். இருபுறங்களிலும் சிறிய நீர்ப்பாசன வாய்க்கால்களுடன் கூடிய நாலைந்து அடி அகலமுள்ள கூழாங்கல் பாதையில் அவர்கள் வெகு விரைவில் நுழைந்தார்கள். அறு வடை முடிந்துவிட்டதால் வயல்களில் பெரும் பகுதி ஈரமின்றி வறண்டு கிடந்தது. குழுவினர் வரிசையாக நின்றனர். ஈஸ் தன் தந்தையுடன் நடந்தாள்: ஸ்வாட் சிறுவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண் டிருந்தாள். அவர்களுக்கு சற்று முன்னல் ஸ்பானே யும் ஜேம்ஸையும் நெருக்கமாகத் தொடர்ந்தபடி லெய்வா சென்ருள். - "இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?” என்று கேட்டான் ஜேம்ஸ்; அவன் கையில் ஒரு கோட் இருந்தது. அது சரியானபடி இருந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதன் பையி லிருந்த கனமான ஒரு சாமானை அடிக்கொருதரம் தொட்டுப் பார்த்துக் கொண்டான் அவன். 'இன்னும் கொஞ்சதுரம்தான் அரைமணி நேர நடை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு பின்னல் வரும் லெய்வாவின் பக்கம் திரும்பி, உனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/251&oldid=1274969" இலிருந்து மீள்விக்கப்பட்டது