உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認53 செளகரியமாக இருக்கிறதா?” என்று கேட்டான் ஃபான். "செளகரியம் இருக்கட்டும்; இன்று திங்கள். வெள்ளிக்கிழமை இரவு அங்கு நாம் இருக்க முடியு மென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” - 'வெள்ளி அல்லது சனியன்று போய்ச் சேர்ந்து விடலாம். எல்லாம் சந்தர்ப்பத்தைப் பொறுத்திருக் கிறது.” கற்பனை செய்து பாருங்கள். நான் சனிக்கிழமை இரவன்று நன்கு விருந்து சாப்பிடப் போகிறேன்!” லெய்வாவின் குரல் கலகலப்பாகவும் உற்சாகம் நிறைந்ததாகவும் இருந்தது. அவ்விதமான உல்லாசத்துடன் அவள் பயணத் தைத் தொடரத் துணிந்தது கண்டு ஃபான் மகிழ்ச்சி யடைந்தான். அவனும் நல்ல மனமகிழ்ச்சியுடன் இருந்தான். 'பத்தாண்டுகளாக நான் ஹாங்காங்கைப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்ப்பதற்கு அது குன்று களுக்கு அப்பால் இருப்பதுபோலத் தோன்றுகிறது; குன்றுகளைக் கடந்து செல்ல நான் ஒருபோதும் முயன்றதில்லை. யாங்செங் ஏரியின் மிகச் சிறந்த நண்டுகள் ஹாங்காங்கில் கிடைக்குமென்பது மெய் தான? ஆளுல், சூசெள வாசிகள் அவைகளை ஒரு போதும் காண்பதில்லையாமே? அவ்வாறு எனக்குச் சொன்னர்கள்.” - . அது எனக்குத் தெரியாது. ஷன்டுங்கைச் சேர்ந்த வயது சென்ற அகதிப்பெண் ஒருத்தி தன் உறவினர் வீட்டில் ஷன்டுங்கைச் சார்ந்த பருமனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/252&oldid=752824" இலிருந்து மீள்விக்கப்பட்டது