பக்கம்:இலட்சிய பூமி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

했58 'ஆகட்டும். துரங்குகிருற்போல நான் பாசாங்கு செய்ய இயலும். “சீனர்களாகிய நாங்கள் எப்படியும் ஓர் ஆங்கி லேயரை அடையாளம் கண்டுகொள்ள முடியும்!” "எப்படி?” "ஆங்கிலேயர் உயரமாகவும் கடுரமாகவும் உயர்ந்த மூக்குடனும் காணப்படுவார், வெள்ளையரை அவரது மூக்கைக் கொண்டு ஜனங்கள் எப்போதும் தெரிந்து கொள்கிருர்கள்." பேச்சின் விஷயம் சொந்த முறையில் போய்க் கொண்டிருந்தது. மேலும், அவனுக்குள்ள அபா யத்தைப் பற்றியும் அவள் தமாஷாகப் பேசிக் கொண்டு இருந்தாள். அது கீழ்நாட்டுப் பாணியில் இருந்தது. அவள் சொன்னதை அப்படியே அதே அர்த்தத்தில் எடுத்துக்கொண்டான் அவன்; 'மூக்கை இப்போது வெட்ட முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன்” என்ருன். இந்தச் சிறிய நகைச்சுவை அவர்களின் உற்சா கத்தைக் கிளறிவிட்டது. பாட்டுப் பாடும் பெண் ணின் வேலை பிறரை மகிழ்விப்பதே என்ருல், அவள் அதைச் சரிவரச் செய்தாள். டுவான் குடும்பத் தினர் சில கஜதுரம் பின் தங்கிவிட்டனர். அவர் களுக்காக இவர்கள் காத்திருந்தனர். அவர்கள் வந்து சேர்ந்ததும், லெய்வாவை அண்டி, அவர்கள் எதற்காகச் சிரித்துக் கொண்டிருந்தார்களென்று ஈஸ் வினவினள். அவளிடம் லெய்வா சொன்னுள். "நம் இருவரில் உங்கள் சிநேகிதருக்குத்தான் வெகு அழகான முக்கு இருக்கிறது”என்ருள் லெய்வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/256&oldid=752828" இலிருந்து மீள்விக்கப்பட்டது