உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255


கஷ்டங்கள், ஆபத்து ஆகியவற்றைப் பற்றிய கதைகளை அவன் கேள்விப்பட்டிருந்தான். அகதி களின் இதயங்களிலும் நம்பிக்கை உல்லாசம் நண்டு விருந்து போன்ற கனவுகள் குறைந்திருக்கும் என்று அவன் எண்ணியதில்லை. யாத்ரிகர்களுக்கு நம்பிக்கைகளும் கனவுகளும் இருந்தன. அவ்வாறு இல்லாவிட்டால், அவர்கள் யாத்ரிகர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை அவன் உணர்ந்தான். கவலையற்ற அந்நியோந்யமான குரலில் லெய்வா பேசினுள். தெய்வ நம்பிக்கையற்ற சீனர்கள் கவலை இல்லாமலும், சம்பிரதாயப்படி இல்லாமலும் இருப் பதை அவன் அறிந்திருந்தான். ஆனல் லெய்வா வைப்போன்ற ஒரு பெண்ணை அவன் இதுவரை சந்தித்ததே இல்லை. தங்கள் வாழ்நாள் பூராவும் தங்களுடனேயே தங்கிவிடக்கூடிய வகையில், பாட் டுப்பாடும் பெண்கள் சந்தோஷமாகப் பேசும் பாணியை அவன் கண்டிருந்தான். ஆனல் லெய்வா அவ்வகையைச் சேர்ந்தவளல்ல! - 'நீங்கள் பஸ்ஸில் போகும்பொழுது உங்கள் குல்லாயை அப்புறப்படுத்திவிட்டு, உங்களது மேல் சட்டையின் சழுத்துப் பட்டையைத் துரக்கிவிட்டுக் கொள்ள வேண்டும்; ஒரு அசல் சீனன் மாதிரி, நீங்கள் எவ்வாறு நடமாட முடியும் என்பதைத்தான் என்னுல் கற்பனை செய்து பார்க்கவே இயலவில்லை; சிமெஸ் நீங்கள் பஸ்ஸில் செல்லும்போது வருத்த மாக இருப்பதுபோல் பாவனை செய்யுங்கள்; வாய் திறந்து பேசாதீர்கள். அதுதான் நல்லது” என்ருள் லெய்வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/255&oldid=1274971" இலிருந்து மீள்விக்கப்பட்டது