பக்கம்:இலட்சிய பூமி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258


ஆங்கிலேயப் பெண்களைப் பொறுத்த அளவில், அவர்களுக்கு பேச்சுச் சுதந்தரத்துக்குச் சட்டரீதியாக உத்திரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு புனிதமான உரிமையாக ஆகிவிட்டது இல்லையா?” "நான் கேள்விப்பட்ட அளவில் அது வேடிக்கை யான வீண் வார்த்தையாகவே இருக்கிறது. கொள் கையில் சுதந்திரம், மதச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம் என்ருல், என்னுல் புரிந்துகொள்ளமுடியும் ஆனல், பேச்சுச் சுதந்திரத்துக்கு சட்டப்படி ஏன் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்? அது அவ் வளவு முக்கியமானதாக எனக்குத் தோன்றவில்லை. பேசுவதற்கு விஷயம் இல்லாவிடில், பேச்சுச் சுதந் தரத்தினுல் என்ன பயன்?” ஜேம்ஸ் பெரிதும் வியப்படைந்தான்; "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்?’ என்று மட்டும் கேட் டான், 'வருஷக் கணக்காக கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் நான் இருந்ததன் காரணமாக இருக்கலாம். நீங்கள் விஷயங்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்; அவற்றைச் சொல்ல உங்களை அவர்கள் அனுமதிப்ப தில்லை. ஆகையால் அவைகளை நீங்கள் சொல்ல மாட்டீர்கள். அதுகூட அவ்வளவு பெரிய கஷ்டமல்ல. நான் விரும்புவதெல்லாம் நிம்மதியாக இருப்பதற் குச் சுதந்திரம் வேண்டுமென்பதுதான். நான் தனி யாக விடப்பட வேண்டும்; என் சொந்தப் பாதை யில் நடக்க வேண்டும்; என் சுய எண்ணங்களைச் சிந்திக்க வேண்டும்; கட்சியின் சங்கேத முழக்கங் களுக்கு குரங்கு மாதிரி கூச்சலிடக் கூடாது!-ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/258&oldid=1274972" இலிருந்து மீள்விக்கப்பட்டது