உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262


டுங்வானிலிருந்து ராணுவம் வந்தது. ஒரு வகையில் உங்களுக்கு இது அதிர்ஷ்டமானதாகும். கட்சி அலுவலகத்தின் வழக்கமான வேலை முறை மாறி விட்டது; நீங்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறும் வரை புதிய அதிகாரி அதையெல்லாம் கவனிக்க மாட்டார்!’ என்ருன் ஃபான். 'பஸ்ஸில் நம்மைச் சோதனை போடுவார் களோ?” 'இல்லை. அடுத்துள்ள செங்கியாங் ஸ்டேஷனில் சில வேளைகளில் ஊர்க்காவல் படையினன் ஒருவன் வரலாம். நீங்கள் அதைப்பற்றிச் சட்டை செய்ய வேண்டாம்; அதையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். அவர்கள் அதிகம் தொந்தரவு செய்ய மாட்டார்கள். லுங்காங்கில்தான் நாம் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். அவ்விடத்தை அடைவ தற்கு முன் நாம் பஸ்ஸைவிட்டு இறங்கிவிட வேண் டும். நமது பயணம் உண்மையாக அங்குதான் ஆரம்பமாகிறது! அப்போது தூரத்தில் வரும் பஸ் விளக்குகள் தெரிந்தன. பஸ் ஒரு திருப்பம் திரும்பி அவர்கள் உள்ள திசையில் வந்து கொண்டிருந்தது. பஸ் விளக் கொளி அவர்கள்மீது நேராக வீசியதால் அவர்கள் சற்றுத் தள்ளி சாலை ஓரத்தில் இருட்டுக்கு பின் வாங்கினர். 'நமது பஸ்தான் அது” என்று ஃபான் தாழ்.குரலில் கூறினன். ஈஸுவும் ஜேம்ஸும் இணைந்து நின்றனர், அவன் கை தன்னுடைய கையைக் கெட்டியாகப் பற்றியிருந்ததை அவள் உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/262&oldid=1274976" இலிருந்து மீள்விக்கப்பட்டது