பக்கம்:இலட்சிய பூமி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261


அவர்கள் செங்கியங் செல்லும் நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தனர். பிறகு திரும்பி நெடுஞ்சாலைக்கு பக்கமாகச் செல்லும் நாட்டுப்புறச்சாலையில் நடந் தார்கள். சாலையில் விளக்குகள் இல்லை. ஒரு சிறிய குன்றைக் கடப்பதற்கு முன்னலுள்ள பஸ் நிற்கும் இடம் இப்போது நிலவொளியில் மங்கிய சாம்பல் நிறத் துணுக்குப்போல் தெரிந்தது. கிராமப்புறச் சாலைக்கு சில அடிகள் மேலே நெடுஞ்சாலை சற்று உயர்ந்து சென்றது. நெடுஞ்சாலை நெடுகிலும் நீண்ட இடைவெளிகளில் செடிகள் நட்டு வைக்கப்பட் டிருந்தன. கீழேயிருந்து அவர்கள் ஜாக்கிரதையாகக் கவனித்தனர். சுற்றிலும் யாரும் இல்லை ; காத்திருக் கும் பஸ் பிரயாணிகளுக்கு தங்குமிடங்கூட அங்கு இல்லை. குறித்த நேரத்தில் பஸ் வந்துவிடுமா?” என்று கேட்டான் ஜேம்ஸ். 'வருமென்று நினைக்கிறேன். ஊரடங்குச் சட்டம் தவிர, மற்றப்படி எல்லா விஷயங்களுக்கும் வழக்கம் போலவே நடக்க வேண்டுமென்றுதான் ராணுவம் விரும்புகிறது. இதில் வேடிக்கை என்னவென்ருல், உள்ளூர் கமிஷனர் கலகம் நடந்ததிலிருந்து இருக்கு மிடம் தெரியாமல் மறைந்துவிட்டார்; மாகாண கமிஷனர் ஸெங்கே சம்பவம்பற்றி மேலிடத்துக்கு அறிவிக்க மறு ரெயிலில் கான்டனுக்குச் சென்றுவிட் டார். உள்ளுர் நிர்வாகத்தின் பொறுப்பை மேற் கொள்வது தான் தன் கடமையென்று அவன் கருத வில்லை. அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/261&oldid=1274975" இலிருந்து மீள்விக்கப்பட்டது