பக்கம்:இலட்சிய பூமி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265


புறத்தை நிதானமாகப் பார்த்தான். அவனுக்குப் பக்கத்தில் நல்ல தேகக்கட்டுடன்கூடிய ஃபான், கம்பி யொன்றில் சாய்ந்த வண்ணம், டிரைவருடன் மெல்லிய குரலில் உரையாடிக்கொண்டிருந்தான். பஸ் இறக்கத்தில் செல்லத் தொடங்கியது; விரைவில் ஒரு சிறு நகரத்தில் நின்றது; தெரு விளக்குகள் மங்கலாக எரிந்தன. போலீஸ்காரன் ஒருவன் வந்தான். பஸ்ஸின் கதவருகே நின்று கொண்டு நகரத்தின் நிலைமைபற்றியும் பிரயாணி களின் எண்ணிக்கை குறித்தும் டிரைவரை விசா ரித்துக்கொண்டிருந்தான். நுழைவாயிலுக்கருகில் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தான் ஃபான். எந்தக் கணத்திலும் போலீஸ்காரன் பஸ்ஸிற்குள் நுழைந்துவிடுவான்! . ஃபான் கீழே இறங்கினன்; கதவுக்கு எதிர்வசத் தில் நின்றுகொண்டான். சிகரெட் டப்பாவை வெளியே எடுத்து, அதை போலீஸ்காரனிடம் நீட்டினன். - 'புகை பிடியுங்கள். நான் கமிஷனரிடமிருந்து வந்திருக்கிறேன்!” - போலீஸ்காரன் அவனை உற்றுப் பார்த்தான். அவனுடைய சுங்ஷான் இராணுவ உடுப்பு, விளிம் பிட்ட மூக்குக் கண்ணுடி, தொழில் ரீதியான முகம் ஆகியவற்றின்மூலம் அசல் அதிகாரியாகவே ஃபான் தோன்றினன். - - . . 'அது மிகவும் பயங்கரமாகயிருந்தது. அறிவு கெட்ட ஜனக்கூட்டம் அது. நாங்கள் இருபதுமுப்பது ஆட்களை வளைத்துப் பிடித்துவிட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/265&oldid=1274977" இலிருந்து மீள்விக்கப்பட்டது