உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266


ராணுவம் பொறுப்பேற்றுவிட்டது. ஒ ழு ங் கு ம் அமைதியும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட் டிருக்கிறது.” 'நீங்கள் லுங்காங்குப் போய்க்கொண்டிருக்கி lர்களா?” என்று போலீஸ்காரன் விசாரித்தான். 'இல்லை. பிங்ஷான் அரசாங்க விவசாயப்பண் ணேக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். உள்ளே சில குடியானவர்கள் இருக்கிரு.ர்கள்: அவ்வளவுதான். இஷ்டப்பட்டால் உள்ளே சென்று பாருங்கள். மெதுவாகப் போங்கள். என் மனைவியையும் என் குடும்பத்தினரையும் தொந்தரவு செய்யாதீர்கள்.” "அப்படியானல் அவர்களை தொந்தரவு செய்யா திருப்பதே நல்லது' என்று பணிவாகச் சொன்னன் போலீஸ்காரன். - - சிகரெட்டின்அடிப்பகுதியைத் தரையில் பலமாக வீசியெறிந்துவிட்டு உள்ளே தாவினன் ஃபான். படிக்கட்டில் நின்றுகொண்டு, மிச்சம் இருந்த சிக ரெட் பெட்டியை போலீஸ்காரனிடம் வீசினன். அவனுக்கு நல்வாழ்த்துச் சொன்னன். போலீஸ் காரன் புன்னகை புரிந்தான்; பஸ் புறப்படுவதற்காக தன் கையை அசைத்தான் அவன். ஃபான் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினன். "இனி நீங்கள் அனைவரும் துரங்கலாம். லுங்காங் போய்ச் சேருவதற்கு அநேகமாக இன்னும் இரண் டரை மணி நேரமாகலாம்.' . ஜேம்ஸ் அப்போதுதான் நல்ல மூச்சுவிட்டான். "பஸ் நிறுத்தப்படும் இடம் இனி எதுவும் இல்லை அல்லவா?" என்று டிரைவரிடம் கேட்டான் ஃபான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/266&oldid=1274978" இலிருந்து மீள்விக்கப்பட்டது