பக்கம்:இலட்சிய பூமி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267


'வின்சூவில் யாராகிலும் பிரயாணிகள் இறங்கி ெைலாழிய பஸ் நிற்காது. இந்த இரவு வேளையில் அப்படி யாரும் இறங்கமாட்டார்களென்றே தோன் றுகிறது.” ஈஸாவைச் சுற்றிக் கையைப் போட்டு அணைத்து மகிழ்ந்தான் ஜேம்ஸ். மடியில் பேரப்பிள்ளையைக் கிடத்திக்கொண்டு டுவான் நித்திரையிலாழ்ந்திருந் தான். முதல் வரிசையில் லெய்வாவோடு நெருக்க மாய் இணைந்து உட்கார்ந்திருந்தான் ஃபான். இரவுக் காற்று குளிர்ந்திருந்தது. ஈஸுவின் தலை கீழே தொங்கி தன் தோளின்மீது சாய்ந்திருந் ததை ஜேம்ஸ் உணர்ந்தான். த ன் னு ைட ய கோட்'டின் ஒரு பகுதியைக்கொண்டு அவள்கால்களை மூடுவதற்காக அவளை மெள்ள நகர்த்தினன். பஸ் சத்தமிட்டுக்கொண்டும், சந்தடிசெய்யா மலும் முன்னேக்கிப் போய்க் கொண்டிருக்கையில், பிரம்மாண்டமாய்க் கடந்துசென்ற இருண்ட தோற் றங்களை மணிக்கணக்கில் வெறித்துப்பார்த்தான் ஜேம்ஸ். இரண்டு உயர்ந்த மலைகளுக்கு நடுவில் ஒரு குறுகிய நீர்ப்படுகையின் வழியை அவர்கள் கடந்து கொண்டிருந்தார்கள். மலேயுச்சிக்கு மேலே அவனுக்கு இடப்புறத்தில் சந்திரன் தெரிந்தது. அது அமைதியாகவும் மாயசக்தி கொண்டதாகவும் இருந்தது. பிற்பகலில் ஹாங்காங் போய்ச்சேர்ந் திருக்க வேண்டிய தன் அத்தையைப்பற்றி அவன் எண்ணமிட்டான். அருகில், வயதான டுவான் அமைதியாகத் துரங்கிக்கொண்டிருந்தான். கறுப்பு நிறக் காற்சட்டை அணிந்தலெய்வாவின் கால்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/267&oldid=1274979" இலிருந்து மீள்விக்கப்பட்டது