உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 11 இரவு. கிட்டத்தட்ட மணி ஒன்று ஆகி விட்டது. கிராமம் உறங்கிக் கிடந்தது. அரவம் ஏதும் இல்லை. கிராமத்தின்பரந்த நெல்வயல்கள் மீது நிலவொளி வீசிப் பிரகாசித்தது. 'இவ்விடத்தில் இருந்துதான் நாம் நமது பயணத்தைத் தொடங்குகிருேம்” என்ருன் ஃபான். அரளிச் செடிகள் மண்டிய மேட்டுக் கரையுடன் கூடிய ஒரு சிறிய நீரோடையின் அருகே அவர்கள் வந்தார்கள். ஃபான் அவர்கள் எல்லோரையும் ஒன்ருக அழைத்தான். 'நாம் இப்போது லுங்காங்குக்குச் சமீபத்தில் இருக்கிருேம்; அதனின்றும் நாம் விலகிவிடவேண்டும். இங்கிருந்து பிங்ஷான் வரைக்கும் திறந்த வெளி தான். பிங்ஷானிலிருந்து சில மைல் தொலைவில் மலைகள் ஆரம்பமாகின்றன். நாளைக் காலையில் கோலநட் மலையின் மூன்று சிகரங்களை உங்களுக்குக் காட்டுகிறேன். இதற்கும் பிங்ஷானுக்கும் இடையில் பூராவும் நெல்வயல்தான். பஸ்ஸில் போக முடிந் தால் அரைமணி நேரப் பயணந்தான். நாளைய தினம் நாம் பகல் முழுவதும் மறைந்திருந்து, இரவில் விரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/269&oldid=752842" இலிருந்து மீள்விக்கப்பட்டது