உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271


'அசாயைக் குறித்துத்தான் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. வெளிப்படையாக அவளுல் இக்காரியத்தைச் செய்ய முடியாது." "நகரத்திற்கு வெளியே எங்கோ ஓரிடத்தில் அவன் இருக்க வேண்டாம். நான் நிச்சயமாக இருக் கிறேன். அகப்பட்டுக் கொள்ளமாட்டான் அவன்; சாமர்த்தியமான பையன்.” ரஸ்தா மேல்நோக்கி வளைந்து சென்றது; மலை செங்குத்தாகயில்லை; பாறைப் பிரதேசமாக இருந்தது. சிறுவன் ஸ்ப்ரெளட்டை கையால் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்வாட், இவ் வகையில், தான் அவர்களுக்கு உபயோகமாயிருப் பதை அவள் நிரூபித்தாள். அவள் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்பது யாருக்குமே தெரியாது. ஏனென்ருல்? அவள் அவ்வளவு குறை வாகப் பேசினள். சிறுவன் ஸ்ப்ரெளட்டின் வய துள்ள மகன் ஒருவனை அவள் அப்போதுதான் இழந் திருந்தாள். அவர்களது முன்னேற்றம் தாமதமாக இருந்தது. ஈஸுவின் துணையுடன் நடந்த டுவான் களைப்பினல் அடிக்கடி நிற்கவேண்டி இருந்தது. அவர்கள் குறிப் பிட்ட தூரம் மேலே போய்ச் சேர்ந்ததும், அடியி லிருந்த இயற்கைக் காட்சியைப் பார்த்தார்கள்; எண்ணற்ற நீரோடைகளால் பிரிக்கப்பட்ட வயல் களின் அகன்ற பரப்பு, இப்போது கறுத்த சாம்பல் நிறமாகவும் மூடுபனி சூழ்ந்த வெள்ளைத் திட்டுகளாக -வும் தோன்றின. அகன்ற நதி ஒன்று லுங்காங் நகரத்தைச் சுற்றி ஒடியது: அது அவர்கள் காலடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/271&oldid=1274981" இலிருந்து மீள்விக்கப்பட்டது