உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2“2 யின் கீழே திசை மாறி பள்ளத்தாக்கை நோக்கித் திரும்பியது. அந்த மலைப்பாதையில் குடி இருப்பு இல்லை. அங்கும் இங்குமாக, கல் உடைப்பவர்களின் குடி சைகள் இரண்டொன்று இருந்தன; ஆனல் வீடுகள் இல்லை. சிறு தொலைவு தள்ளி, மரங்கள் அடர்ந்த ஒரு சிறிய தேய்ந்த பாதை வடக்கே சென்றது. சுமார் ஒன்றரை மைல் தூரம் நடந்திருந்தார்கள் அவர்கள்; எல்லோருமே களைத்திருந்தனர். "மேலே சென்று சிறு காடு ஒன்றைத் தேடிப் பிடிப்போம்” என்று சொன்னன் ஃபான். "நாம் குகைகளுக்குப் போய்க்கொண்டிருக்க வில்லையா?” என்று கேட்டான் ஜேம்ஸ். - 'அவ்வளவு உறுதியாகச் சொல்வதற்கு இல்லை. அருகே கிராமம் ஒன்று இருக்கிறது. நாய்களே எழுப்ப நான் விரும்பவில்லை. நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்.” அவர்கள் சாலையைத் துண்டித்துக் கீழே இறங் கினர்கள். சற்று மேலே புதர்களால் சூழப்பட்ட மரங்கள் அடர்ந்த மறைவான இடம் ஒன்று இருப் பதைக் கண்டார்கள். சுத்தமாக இருந்த அந்த இடத்தைச் சுற்றி புதர்கள் மண்டியிருந்தன; அவர்கள் உள்ளே மேற்கொண்டு செல்ல முயற்சி செய்யவில்லை. ஒரு மெல்லிய பனிப் படலம் உச்சி மீது தொங்கியது; தரை ஈரமாக இருந்தது: திறந்த வெளியில் சமமான ஓர் இடத்தைக் கண்டுபிடித்து, அதன்மீது தன்னுடைய கோட்டை கழற்றி வைத்தான், ஜேம்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/272&oldid=752846" இலிருந்து மீள்விக்கப்பட்டது