உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273


“இந்த இடம் நல்ல பாதுகாப்பாக இருக்கிறது. நாம் இங்கேயே அமர்ந்து, இரவுப் பொழுதுக்கு ஒய்வெடுத்துக் கொள்வோம்,' என்ருன் அவன். ஃபானும் லெய்வாவும் மேல்நோக்கி சிறிது தூரம் சென்று இராப்பொழுதைக் கழிக்க ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பள்ளத் தாக்கை பார்த்தவண்ணம் அவர்கள் இருவரும் சேர்ந்து நின்று கொண்டிருந்ததைக் கவனித்தான் ஜேம்ஸ். 'எல்லோரும் இங்கே வாருங்கள். உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்கிறேன்.” ஜேம்ஸ்-ஈஸ் ஜோடி உடனே சென்ருர்கள்: மற்றவர்கள் களைப்படைந்திருந்ததால் அங்கு செல்ல வில்லை. . - 'அங்கே பார்த்தீர்களா? தெற்கே நோக்குங்கள். மினுக் மினுக் கென்று ஒரு வெள்ச்சம் தெரிகிற தல்லவா?” என்ருன் ஃபான். 'ஒன்றையும் காணுேமே!' 'இல்லை. கவனமாகப் பாருங்கள். மேகங்களின் விளிம்புக்குச் சற்று மேலே....அங்கேதான்!........ அது தான் கோலநட் மலை, உச்சியில் மணிக்கூண்டு இருக் கிறது. அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வரு கிறது. துருவ நட்சத்திரத்தைப் போல, அதைக் கொண்டுதான் அகதிகள் யாவரும் வழியை நிதா னித்துக் கொள்கிரு.ர்கள்; இதில் வினேதம் என்ன வென்ருல், அம்மாதிரி இரண்டு மலைகள் இருக் கின்றன. இரும்புப் பாதையின் கிழக்கே கோலகட் இருக்கிறது; மேற்கே மெய்லின்ஷான் உள்ளது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/273&oldid=1274982" இலிருந்து மீள்விக்கப்பட்டது