உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ဂုဂု 2 பாட்டனுக்குப் பக்கத்தில் பையனைப் படுக்க வைத்தாள் ஈஸ்"; அவனுக்கு முத்தம் ஈந்தாள்; தலைக்கு அணைவாக துணி மூட்டையை வைத்துக் கொண்டு தன் தகப்பனர் சுகமாகப் படுப்பதற்கு ஒத்தாசை செய்தாள்; அவன் தலைமயிரை அன்புடன் தடவிக் கொடுத்தாள் அவள், அவள் திரும்பிவர காலெடுத்து வைத்தாளோ இல்லையோ, பையன் மீண்டும் அழலானன். "தாத்தா, எனக்குப் பசிக்கிறது.” "ஈஸ் புன்னகை புரிந்தாள். "சற்று பொறுங்கள், அப்பா.” மூட்டையைத் திரும்பவும் அவிழ்த்துக் கரண்டி ஒன்றை எடுத்தாள் அவள், பிறகு தன் இடுப்புக் கச்சையைத் தளர்த்தி, அதிலிருந்து வறுத்த அரிசியை மிகவும் கவனமக்க அளந்தெடுத்து, அதைப் பையன் ஒவ்வொரு கரண்டியாக உண்ணும்படிச் செய்தாள், நோயாளிக்கு மருந்து கொடுப்பதுபோல, "அப்பா உங்களுக்கும் கொஞ்சம் தரட்டுமா?” வேண்டாம் எனக்குப் பசியில்லை.” ஜேம்ஸ் காத்துக் கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிச் சென்ருள் ஈஸு. வறுத்த அரிசி கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?” "ஊஹகும். எனக்குப் பசியில்லை...! . அகன்றிருந்த கறுத்த இடுப்புக் கச்சையிலிருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து, “சுவைத்துப் பாருங்கள்,” என்று சொல்லி அவனது திறந்திருந்த கையில் கொட்டினுள். 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/277&oldid=752851" இலிருந்து மீள்விக்கப்பட்டது