உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278


மொரு மொருவென்றிருந்த அரிசி மணிகளை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு நிதானமாக மென்ருன் ஜேம்ஸ். "பரவாயில்லை. ஓரளவு க த க த ப் பா யு ம் இருக்கிறது.” "வாஸ்தவம்தான். இடுப்புக் கச்சைப் பையி லிருந்து இப்பொழுதுதானே எடுத்தேன்!” "தானியங்களான ரொட்டியை நீ சாப்பிட்ட துண்டா?" அற்புதமாக இருக்கும்!” 'எனக்கு ஞாபகமில்லை. அம்மாதிரி ரொட்டி பீகிங்கில் இருந்ததா வென்றும் எனக்குத் தெரிய வில்லை. அது இனிப்பாக இருக்குமா?” "ஆமாம்; வழக்கமாக அப்படித்தான் இருக்கும். வெண்ணெயில் அதை நாங்கள் வறுப்போம்.” "எங்களுக்குச் சர்க்கரை கிடைக்கவில்லை. ஆகையால், லோயா சாற்றை ஊற்றி அரிசியை வறுத்தேன். மிகவும் நேர்த்தியாக இருக்கிறது இல்லையா?” 'மிகவும் ருசியாக இருக்கிறது.” சுற்றிலும் பார்க்கத் திரும்பின்ை ஜேம்ஸ், அவர்களுக்கு மேலே, குன்றின் பாறை நிறைந்த முனையில், நிலவொளி தேங்கியது. அந்தத் தெளி வற்ற வெளிச்சத்தில் அந்த வெண்ணிறத் தோற்றம் ஜீவனுடன் விளங்கியது. ஜேம்ஸ் பின்னல் சாய்ந்து, ஈஸாவை தன்னுடன் நெருக்கமாக இழுத்துக் கொண்டான். - 'உன் தந்தைக்கு நீ மிகவும் அவசியம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/278&oldid=1274985" இலிருந்து மீள்விக்கப்பட்டது